இலங்கை வரும் இந்திய பிரதமரின் முதல் விஜயம் யாழ்ப்பாணத்திற்கு..!

ஆசிரியர் - Editor I
இலங்கை வரும் இந்திய பிரதமரின் முதல் விஜயம் யாழ்ப்பாணத்திற்கு..!

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குள் தன் முதலாவது பயணமாக யாழ்.மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார். 

5வது பிம்ஸ்டெக் (பல்துறை, தொழில்நுட்ப , பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உச்சிமாநாடு மார்ச் 30ல் கொழும்பில் நடக்கவுள்ளது. 

இந்நிலையில் அந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று அறியவருவதாக 'சண்டே டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு கலாசார நிலையத்தை திறந்து வைத்தற்குப் பின்னர் 

அங்கிருந்து கொழும்புக்கு விமானம் மூலம் செல்வதற்கும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்.விமான நிலையம் போன்றவற்றில் புதுடில்லியின் முதலீடு குறித்து இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடியுள்ளன. 

கடந்த பெப்ரவரி 7 இல் புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது.பிரதமர் நரேந்திர மோடியை .அமைச்சர் பீரிஸ் சந்தித்து 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கடிதம் ஒன்றை அவரிடம் கையளிக்க இருந்தபோதிலும் அது நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு