SuperTopAds

மீண்டும் தோல்வியடைந்த தங்க வேட்டை!

ஆசிரியர் - Admin
மீண்டும் தோல்வியடைந்த தங்க வேட்டை!

விடுதலை புலிகளால், புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை கண்டுபிடிக்க கிளிநொச்சிப் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தோண்டும் முயற்சியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். 

கிளிநொச்சி - அறிவியல்நகர் பிரதேசத்தில் தோண்டும் பணி 3 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொலிஸாருக்கு எதுவும் கிடைக்காததால் நிறுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களிலும் விடுதலை புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டும் பணிகள் நடைபெற்றிருந்த போதிலும், இதுவரையில் தங்கம் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.