ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்க!

ஆசிரியர் - Editor IV
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்க!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகக் குழுவின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், திஸாநாயக்க அந்த பதவியை ஏற்க மறுத்ததன் காரணமாக சுமார் ஒரு வருட காலமாக அப்பதவி வெற்றிடமாக இருந்தது.

சாகல ரத்நாயக்கவை தேசிய அமைப்பாளராக நியமிப்பதற்கான தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

சாகல ரத்நாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்தவர் என்றும் அவரது வெற்றிடத்துக்கு இருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அந்த வெற்றிடங்கள் எதிர்காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துடன் நிரப்பப்படும் என்றும் ஐ.தே.க பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு