SuperTopAds

ஒமிக்ரோனுக்கு முற்றுப்புள்ளி!! -தடுப்பூசி தயார்-

ஆசிரியர் - Editor II
ஒமிக்ரோனுக்கு முற்றுப்புள்ளி!! -தடுப்பூசி தயார்-

உலக நாடுகளை நடுக்க வைத்துள்ள ஒமிக்ரோன் திரிவு வைரஸ் தொற்றை சமாளிக்கும் தடுப்பூசியை தயாரிக்க இந்தியா அரசாங்கம் சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது. அதனால், அதற்கு எதிரான தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதி கோரி, இந்தியாவில் மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் விண்ணப்பித்தது.

இந்நிலையில், ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதற்கு சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி அனுமதி அளித்துள்ளார். 

பரிசோதனை செய்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம், ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.