SuperTopAds

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலி கொலை!! -காதலன் நண்பருடன் கைது-

ஆசிரியர் - Editor II
திருமணத்திற்கு வற்புறுத்திய காதலி கொலை!! -காதலன் நண்பருடன் கைது-

திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்த காதலியை கொலை செய்த காதலனும், அவரின் நண்பரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

இந்தியாவின் மும்பை வில்லேபார்லே பகுதியை சேர்ந்த கரோல் என்ற பிங்கி (வயது 28). இவர் கடந்த மாதம் 24 ஆம் திகதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. 

இவ்விடயம் தொடர்பில் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். காணாமல் போன பெண்ணை தேடிய பெலிஸார் மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் அழுகிய நிலையில் அவருடைய சடலத்தை மீட்டுள்ளனர். 

இதையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:- 

குறித்த பெண் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தன்னை திருமணம் செய்யுமாறு குறித்த பெண் வற்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும் திருமணத்தை குறித்த இளைஞர் விரும்பவில்லை. 

இந்நிலையில் சம்பவ தினத்தில் இருவரும் சந்தித்த போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கடும் ஆத்திரம் அடைந்த இளைஞர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்து உள்ளார். மேலும் மார்பில் கத்தியால் குத்தினார். இதில் இளம்பெண் உயிரிழந்தார்.

இவ்விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் காதலனும், கொலைக்கு உதவிய அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.