தவிசாளர்கள் குறித்து தேர்தலுக்குப் பின்னரே முடிவு!

ஆசிரியர் - Admin
தவிசாளர்கள் குறித்து தேர்தலுக்குப் பின்னரே முடிவு!

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆசனப் பங்கீடுகள் தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர்மாவை சேனாதிராசா , செயலாளர் துரைராஜசிங்கம், மற்றும் சிவிகே.சிவஞானம், சத்தியலிங்கம், ஆகியோரின் புளொட் அமைப்பு சார்பாக வட மாகாண அமைச்சர் சிவனேசன், மற்றும் ரெலோ அமைப்பின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிகாந்தா? வினோ நோதராலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை, உள்­ளூ­ராட்சித் தேர்­த­லின் பின்­னரே ஒவ்­வொரு சபை­க­ளுக்­கு­மான தவி­சா­ளர்­கள் யார் என்­பதைப் பகி­ரங்­க­மாக அறி­விப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித் துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. 2011ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றத்­தி­லும் கூடிய விருப்பு வாக்­கு­க­ளைப் பெறு­ப­வர்­கள் தவி­சா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வர் என்று தேர்­த­லுக்கு முன்­னரே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

தற்­போது வட்­டா­ரம், விகி­தா­சா­ரம் என்று இரண்­டும் கலந்த கலப்பு முறை­யி­லேயே தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. இத­னால் கடந்த தட­வை­யைப் போன்று தவி­சா­ளரை நிய­மிக்க முடி­யாத நிலமை ஏற்­பட்­டுள்­ளது.தேர்­தல்­மு­டிந்த பின்­னரே, ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கு­மான தவி­சா­ளர்­க­ளின் பெயர்­களை வெளி­யி­டு­வது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு