SuperTopAds

தாங்க முடியாத கடன் தொல்லை!! -2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை-

ஆசிரியர் - Editor II
தாங்க முடியாத கடன் தொல்லை!! -2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை-

இந்தியாவில் தாங்க முடியாத கடன் தொல்லை காரணமாக தாய் மற்றும் 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டின் கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள கிழக்கே புரி பகுதியில் வசித்து வந்தவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத் தலைவரின் வைத்திய செலவிற்கான இவர்கள் கடன் வாங்கியுள்ளனர். இந்தநிலையில் கடனை கொடுத்தவர்கள் அந்தப் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் பிரசன்னாவால் கடனை திருப்பி அடைக்க முடியவில்லை.

மேலும் கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதன்காரணமாக மனவேதனை அடைந்த அவர்கள் நேற்று காலை பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்றவைத்து தற்கொலை செய்துள்ளனர். கடன் தொல்லை காரணமாக 3 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.