SuperTopAds

தரம் 5 மாணவியை புலமைப்பரிசில் பரீட்சை எழுத விடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்! படிப்பு குறைவாம், வடமாகாண ஆளுநர் கவனத்தில் எடுப்பாரா?

ஆசிரியர் - Editor I
தரம் 5 மாணவியை புலமைப்பரிசில் பரீட்சை எழுத விடாமல் தடுத்த பாடசாலை நிர்வாகம்! படிப்பு குறைவாம், வடமாகாண ஆளுநர் கவனத்தில் எடுப்பாரா?

கோப்பு படம்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததாக குற்றஞ்சாட்பட்டுள்ளது. 

குறித்த மாணவி பாடங்களில் குறைந்த புள்ளிகளை பெற்றதாக காரணம் கூறி பாடசாலை நிர்வாகம் அவரை பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கவில்லை. பாடசாலையில் வகுப்புக்கள் நடைபெற்றபோது, 

பெற்றோரை அழைத்த பாடசாலை நிர்வாகம் அவர்களுடைய மகளுக்கு தனியான மேசை ஒதுக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பாக பெற்றோர் வினவியபோது உங்கள் மகள் பரீட்சைக்கு தோற்ற முடியாது. 

என பாடசாலை நிர்வாகம் கூறியுள்ளது. எனினும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமத வழங்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் அந்த கோரிக்கை கணக்கில் எடுக்கப்படவில்லை. 

இதனால் குறித்த மாணவி உளவியல் ரீதியாக பரிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு ஆளுநர் உள்ளிட்ட பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.