யாழ்.தீவு கடலில் உல்லாச படகில் மிதந்தபடி சுற்றுலா..! வடமாகாணத்தில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக கொழும்பில் இருந்து உல்லாச கப்பல் ஒன்று நேற்று குறிகட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள தீவு கூட்டங்களை சுற்றிப்பார்க்கும் உல்லாச பயணிகளுக்கு ஏதுவாக குடும்பமாகவோ அல்லது தனித்தனியாகவோ கப்பலிலிலே தங்கி நின்று 

தீவுகளை பார்வையிட கூடிய வசதிகள் குறித்த கப்பலில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் மனோகரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்காலத்தில் 30 மற்றும் 100 அறைகளைக் கொண்ட உல்லாசக் கப்பல் யாழ்.மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ளதாகவும் 

இதன் மூலம் வடக்கின் உல்லாசத் துறையை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு