மாணவ தலைவிகளுக்கான சத்தியபிரமாணம் மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வு

ஆசிரியர் - Editor III
மாணவ தலைவிகளுக்கான சத்தியபிரமாணம் மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மத்தி ஸாவியா மகளிர் வித்தியாலய ஒழுக்காற்று சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட   25  மாணவ தலைவி களுக்கான சத்தியபிரமாணம் மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வானது   திங்கட்கிழமை(24)   பாடசாலையின் அதிபர் எஸ். எல்.அப்துல் கபூரின்  தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினரும்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  முஸ்லிம் கல்வி சேவை பிரிவின் செயலாளரும்,கல்வி அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தனவின்  இணைப்புச் செயலாளரும்,ஆசிரியருமாகிய  முஸ்தபா சரினா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி  பிரதேச கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ். எம்.எம்.கலாவுதீன்  ,காத்தான்குடி நகர சபை செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமாகிய  எம்.ஆர். எஸ். ரிப்கா சபீன்  உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்  மற்றும் எமது பாடசாலை ஆசிரியர்கள் கலந்து  கொண்டனர்.

அத்துடன்  இந்நிகழ்வில் எமது பாடசாலை ஒழுக்காற்று சபை ஆசிரியர்களால்  பாடசாலை மாணவர்களுக்கான  ஒழுக்க விழுமிய கோவை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு