விருந்து நிகழ்ச்சியில் வைத்து இளைஞரை அடித்துக்கொன்ற திருநங்கைகள்!!

ஆசிரியர் - Editor II
விருந்து நிகழ்ச்சியில் வைத்து இளைஞரை அடித்துக்கொன்ற திருநங்கைகள்!!

திருநங்கைகள் வைத்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் திருநங்கைகளால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் கர்நாடக மாவட்டம் பெங்களூருவில் உள்ள ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா அருகே லாலாஹட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜந்து திருநங்கைகள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்றுமுன் தினம் குறித்த திருநங்கைகள் தங்களது வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடத்தினர். இதில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞரும்  கலந்து கொண்டார். 

இந்த நிலையில் விருந்து நிகழ்ச்சியின் போது ஆனந்த்துக்கும், திருநங்கைகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆனந்த்தை திருநங்கைகள் ஜந்து பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. 

இதில் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio