விவசாயிகளை தாக்கி சோளக்காட்டில் பதுங்கிய சிறுத்தை!! -பிடிக்கும் முயற்சி தீவிரம்-

ஆசிரியர் - Editor II
விவசாயிகளை தாக்கி சோளக்காட்டில் பதுங்கிய சிறுத்தை!! -பிடிக்கும் முயற்சி தீவிரம்-

இந்தியாவின் திருப்பூர் மாவட்டம் பாப்பாங்குளம் கிராமத்தில் விவசாயிகள் மற்றும் வன பாதுகாவலரை தாக்கி விட்டு தப்பிய சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் மிக மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- சோளத்தட்டு அறுவடை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வரதராஜன் உள்பட 2 பேரை இனந்தெரியாத மர்ம விலங்கு தாக்கியதாக கூறப்படுகிறது.

இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வன பாதுகாவலரை சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்தை வலை கொண்டு அடைத்த வனத்துறையினர், 3 கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு