அதிரடியால் மைதானத்தை கதிகலங்க வைத்த மெக்ஸ்வெல்!! -64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்கள்-

ஆசிரியர் - Editor II
அதிரடியால் மைதானத்தை கதிகலங்க வைத்த மெக்ஸ்வெல்!! -64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்கள்-

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் மெக்ஸ்வெல் பிக் பாஷ் தொடரின் ஆரம்ப சுற்றின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் மைதானத்தை கதிகலங்க வைத்துள்ளார்.

இன்று நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ{க்கு எதிராக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 273 ஓட்டங்களi குவித்தது.

இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணித் தலைவர் மெக்ஸ்வெல் மொத்தமாக 64 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்களை அதிரடியாக குவித்தார். 

மெக்ஸ்வெல்லின் துடுப்பாட்ட மட்டையிலிருந்து இந்த இன்னிங்ஸில் 22 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் விளாசப்பட்டன.

மெஸ்வெல் 41 பந்துகளில் தனது சதத்தை எட்டினார். இதன் மூலம் அவர் பிக் பாஷ் லீக் வரலாற்றில் மிக வேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரரானார். இதற்கு முன்னர் கிரேக் சிம்மன்ஸ் 39 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிக் பாஷ் லீக் வரலாற்றில் வீரர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் அதிகபடியாக பதிவுசெய்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு