கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லை!! -கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை-
இந்தியாவில் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால், டிப்ளமோ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை அருகே உள்ள கழுவந்திட்டை ஆர்.சி வீதியைச் சேர்ந்த பென்சி (வயது 19) மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் கல்வி கட்டணத்தில் மீதிப்பணமான 30 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டியிருந்தது. அந்த பணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக பென்சி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் அவர் பேசிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு தூங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்று விட்டார்.
வழக்கமாக காலையில் எழுந்து விடும் பென்சி நேற்று காலையில் படுக்கை அறையில் இருந்து எழுந்து வரவில்லை. அவருடைய தாயார் பென்சியை எழுப்ப சென்று கதவை தட்டினார்.
ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது பென்சி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி தற்கொலை என்ற விபரீத முடிவுக்கு வந்தது அந்த பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.