பெண்களை இலக்குவைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி..! சகோதரிகள் இருவர் கைது..
வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதாக கூறி பெண்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபட்டுவந்த சகோதரிகளான இரு பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய காலாவதியான உரிமத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடத்தி, அதன் மூலம் பல பெண்களிடம்
24 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணமோசடி செய்த சகோதரிகள் இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.
கண்டி - கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றை நடாத்தி அதன்மூலம் 12 பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல்
சுற்றுலா விசா மூலம் டுபாய் நாட்டுக்கு அனுப்பியமை, மற்றும் அவுஸ்திரேலியாவில் வேலைவாய்பை பெற்றுத்தருவதாக கூறி பெண்ணொருவரிடம் 6 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டமை தொடர்பில்
குறித்த பெண்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதையடுத்து,
அவர்களால் மோசடி செய்யப்பட்ட 615 000 ரூபாவை மீள ஒப்படைக்கமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனையடுத்து இருவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.