தடம் புரண்ட ரயில்!! -இந்தியாவில் 9 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
தடம் புரண்ட ரயில்!! -இந்தியாவில் 9 பேர் பலி-

இந்தியா நாட்டின் மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 9 பேர் பலியானதோடு 45ற்க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 12 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு குடை சாய்ந்ததாக அந்நாட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான உயர்மட்ட தொடருந்து பாதுகாப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் மரணித்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் சிறு காயங்களுக்கு உள்ளானோருக்கு 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Radio