இது கதையல்ல…! நிஜம்.

ஆசிரியர் - Editor I
இது கதையல்ல…! நிஜம்.

இனத்தின் விடுதலைக்காக தம் உயிரையும் கொடுக்கும் திண்ணத்துடன் தம் உறவுகள், பெற் றோர், நண்பர்கள், அழகான வாழ்க்கை எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு போர்க்களம் புகுந்து வீர மரணம் அடைந்தவர்களின் குடும்ப நிலை இன்று என்ன?

நாம் இன்று அனுபவிக்கும் சுகங்கள் அத்தனையையும் கொடுத்தவர்களின் குடும்பங்கள் வீதியி ல் நின்று அன்றாட வாழ்க்கைக்காக போராடி கொண்டிருப்பதை பார்க்காமல் செல்லும் எங்களி ல் பலர் இன்று போராளிகள் குறித்தும், தியாகங்கள் குறித்தும் பேசுவது வேடிக்கை.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடமாகாணத்தில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு சென்றி ருந்தேன். அங்கே வரலாற்று சிறப்பு மிக்க கொக்கட்டிசோலை தான்தோன்றி ஈசுவரர் ஆலயத் திற்கு சில கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுடன் சென்றிருந்தேன். 

அந்த ஆலயத்தின் வாயிலில் கச்சான்(நிலக்கடலை) மற்றும் கற்பூரம் விற்பனை செய்து கொ ண்டிருக்கும் சில வயதானவர்கள் வாகனத்தில் சென்றிருந்த ஊடகவியலாளர்களான எம்மை நோக்கி  வந்து கற்பூரம் வாங்குங்கள், கச்சான் வாங்குங்கள் என கேட்டார்கள். 

கற்பூரம் மற்றும் கச்சான் வாங்குமாறு கேட்ட மிக வயதான தாய் ஒருவரை சுட்டிக்காட்டிய  கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒருவர் இந்த தாய் இந்த நாட்டுக்காக ஒரு மாவீரனை தந்த தாய் இன்று எவராலும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருக்கின்றார் என கூறினார். 

தான்தோன்றி ஈசுவரரை தரிசித்த பின்னர் மீண்டும் அந்த தாயை சந்தித்து பேச்சு தொடுத்தோ ம். நான் கொக்கட்ட சோலையில் வசிக்கிறேன் என்னுடைய பெயர் கண்ணம்மா என்ற அறிமு கத்துடன் பேச தொடங்கிய அந்த வயதான தாய், 

தமிழீழ விடுதலை போராட்டத்தில் தனது ஒரு மகனை மாவீரனாக்கி மண்ணில் விதையாக்கிய கதையை கூறியதுடன், போருக்கு பின்னர் மீள் குடியேறியுள்ள தனக்கு ஒரு வீடு கூட இன்ற ளவும் தரப்படவில்லை. வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியுள்ளேன். 

வீடு கட்டுவதற்காக பெற்ற வங்கி கடனை தீர்ப்பதற்காக கச்சான்(நிலக்கடலை) விற்று மாதம் 1000 ரூபாய் வங்கிக்கு கட்டி வருகிறேன். எவருமே எங்களை கண்டுகொள்ளவில்லை. என்ற பேச்சோடு அவர் தனது வியாபாரத்தை செய்து கொண்டிருந்தார். 

ஆலயத்திற்கு வாகனங்களில் வருபவர்களிடம் ஓடி சென்று கற்பூரம் வாங்குங்கள், கச்சான் வ hங்குங்கள் என கேட்டு கொண்டிருந்தார். இப்படி எத்தனை தாய்? இப்படி எத்தனை தந்தை? இப்படி எத்தனை மனைவி? இப்படி எத்தனை பிள்கைள்?

என்ற மனது கனக்கும் கேள்விகளுடன் சில கச்சான் பைகளை வாங்கிய ஊடக நண்பர்களின் கேள்விகளுடன் அங்கிருந்து விடைபெற்றோம். எமக்காக வாழ்ந்தவர்களுக்கு, எமக்காக வீழ்ந்த வர்களுக்கு நாங்கள் செய்யும் உண்மையான வீர மரியாதை என்பது, 

அவர்களுடைய நினைவு நாளில் தீபம் ஏற்றி மலர் மாலை அணிவித்து கண்ணீர் சிந்துவது ம ட்டுமல்ல. தாம் போரில் வீர மரணம் அடைந்தாலும் நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். அ வர்களுடைய குடும்பங்களை பார்த்து கொள்வோம் என்ற நம்பிக்கை

ஒவ்வொரு போராளியின் மனதுக்குள்ளும் சொல்லப்படாமல் புதைத்து வைக்கப்பட்டிருந்திருக்கு ம். போராளிகளையும், அவர்களுடைய தியாகங்களையும் விலைபேசும் சாக்கடைகளே தங்கள் பிள்ளைகளை உங்களுக்கும் சேர்த்து போராட அனுப்பிய வயதான

தாய்மார், தந்தைமார், இயலாத பெண்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வயிராற உணவை த ன்னும் பெற்றுக் கொடுங்கள். தேச விடுதலை போர் மீதும், போராளிகள் மீதும் தாகம் கொண் டவர்களே..! இவ்வாறானவர்களை தேடி கண்டு பிடித்து உதவுங்கள். 

இது கதையல்ல…! நிஜம்.  


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு