மரத்தில் தொங்கிய ரஷ்ய நாட்டு பிரஜை காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
மரத்தில் தொங்கிய ரஷ்ய நாட்டு பிரஜை காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி..!

பரசூட்டில் குதித்த நிலையில் விபத்துக்குள்ளாகி மரத்தில் விழுந்து காயத்துடன் தொங்கிய வெளிநாட்டவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம்  கலஹா – லுல்கந்துர பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. சுமார் 30 அடி உயரமான மரமொன்றில் இருந்து வீழ்ந்த வேளையில் 

பரசூட் ருலிமங்கொட பகுதியில் தரையிறக்கப்பட்டபோது சுமார் 30 அடி உயரமான மரத்தில் சிக்கியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பிரஜை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இ

வ்வாறு விபத்துக்குள்ளானவர் 35 வயதான ரஷ்ய பிரஜை என தெரிவிக்கப்படுகிறது.கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio