தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு இன்று ஆரம்பம் -சீறிப்பாயும் காளைகள்-

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு இன்று ஆரம்பம் -சீறிப்பாயும் காளைகள்-

இந்திய தமிழ் நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று ஆரம்பமானது. 

ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு முதல் நாளான போகியன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

இதில் பங்கேற்பதற்காக 300 காளைகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதே போல் 700 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இணையம் ஊடாக  பெறப்பட்டிருந்தது.

இதையடுத்து தச்சங்குறிச்சியில் நேற்று அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 

மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் களத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் வாடிவாசலில் இருந்து திமிறியும், சீறிப்பாய்ந்தும் வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் 150 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து யாரும் வராத வகையில் தடுப்பதற்காக கிராமத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Radio