CID என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவர்கள் வீட்டிலிருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு கொள்ளை! 6 கொள்ளையர்களை மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
CID என கூறிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தவர்கள் வீட்டிலிருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு கொள்ளை! 6 கொள்ளையர்களை மடக்கியது பொலிஸ்..

தங்களை CID என அடையாளப்படுத்தி வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த 5ம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கும்பல் தங்களை CID என அடையாளப்படுத்தியுள்ளதுடன், 

வீட்டிலிருந்த பெண்ணை கட்டிவைத்துவிட்டு அவருடைய காதிலிருந்த தோடு மற்றும் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் இரு சந்தேகநபர்களை கைது செய்திருந்த நிலையில், 

அவர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் மேலும் நால்வரை கைதுசெய்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 31,34,29,31 வயதுகளையுடைய ஓட்டுமாவடி, கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள வட்டவான். 

மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.இவர்கள் கடந்த காலத்தில் குற்றச் செயல் காரணமாக கைது செய்யப்பட்டு 

சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தபோது நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியில் வந்ததும் கொள்ளையடிப்பதற்காகன திட்டங்களை வகுத்து, 

வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக் கொண்டு கடந்த 5 ஆம் திகதி வெல்லாவெளி பிரதேசத்தில் குறித்த வீட்டினுள் பொலிஸ் சி.ஐ.டி. என தெரிவித்து 

உள் நுழைந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கொள்ளையடித்த தங்க ஆபரண நிதி நிதிறுவனம் ஒன்றில் 

ஒரு இலச்சத்து 91 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்து அந்த பணத்தை பங்கு கொண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதுடன், 

கொள்ளைக்கு பயன்படுத்திய வாடைக்கார் ஒன்றும், 3 கையடக்க தொலைபேசி, கத்தி கோடரி என்பவற்றை பொலிஸஸார் மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு