இந்தியாவில் கொரோனா நிலைமை மோசம்!! -ஒரே நாளில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் தொற்றாளர் அடையாளம்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் கொரோனா நிலைமை மோசம்!! -ஒரே நாளில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் தொற்றாளர் அடையாளம்-

இந்தியாவில் இன்று திங்கட்கிழமை காலை 9 மணி வரையான கடந்த 24 மணி ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 146 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கும் நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை தொற்று நோயாளர் தொகை மேலும் அதிகரித்துள்ளது. புதிய தொற்று நோயாளர்களுடன் அந்நாட்டில் உறுதி செய்யபட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 3 கோடியே 57 இலட்சத்து 7 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை 146 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாட்டில் தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 83 ஆயிரத்து 936 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 46 ஆயிரத்து 569 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்து 172 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட 7 இலட்சத்து 23 ஆயிரத்து 619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.