நீதிமன்றத்திலிருந்து சந்தேகநபரை வெளியில் கொண்டுவர 2 லட்சம்! பொறிவைத்த பொலிஸார், ஒருவர் தப்பி ஓட்டம், இருவர் சிக்கினர்..
மட்டக்களப்பு - காத்தான்குடியில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை நீதிமன்றத்திலிருந்து வெளியில் எடுத்துத் தருவதாக கூறி 2 லட்சம் ரூபாய் பணம் பெற்ற இருவர் நீதிமன்ற வாசலில் வாகனத்துடன் கைத செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் பிரதான சந்தேகநபர்தப்பியோடிவிட்டார் என மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடியைச் சோந்த ஒருவர் கடந்த முதலாம் திகதி ஜஸ் போதைப் பொருளுடன் காத்தான்குடி பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றில் இருந்து வெளியில் எடுத்து தர 2 இலட்சம்ரூபாவை கோரியுள்ளதாக காத்தான்குடியை சேர்ந்த பெண் ஒருவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு முன்னால் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது வான் ஒன்றில் வந்திருந்தவர்களை பொலிசார் சுற்றிவளைத்தபோது
அங்கிருந்து கப்பம் கோரிய பிரதான நபர் தப்பி ஓடியுள்ள நிலையில் வானில் வந்திருந்த முறைப்பாடு செய்தரிவரின் சகோதரன் மற்றும் வான்சாரதியை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
இதன்போது வான் மற்றும் 4கையடக்க தொலைபேசிகள் ஆவணங்களை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குருநாகல் கல்கமுக பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றிபான் என்பவர் விளக்கமறியலில் இருக்கும் நபரின் மனைவியடம்
தொலைபேசியில் தொடர்பு கொண்ட உனது கணவருக்கு பல்வேறு வழக்குகள் இருப்பாதக தெரிவித்து அவரை நீதிமன்றில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாம் வெளியில் எடுத்துதரமுடியும் இதற்கு 2 இலட்சம் ரூபா கோரியுள்ளார்.
இதனையடுத்து இதனை அவர் மாமியாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் மருமகளிடம் அவன் கதைப்பதை ரைக்கோடிங் செய்து தனக்கு அனுப்புமாறு ஆலோசனை வழங்கிவந்துள்ளார்.
இதில் தொலைபேசியில் பணத்தை கோரியவர் கல்கடுக பிரதேசத்தில் சகோதரனின் வீட்டிற்கு சென்று வந்தபோது அங்கு கதைத்த முகமட் றிபான் குரல் என அடையாளம் கண்டு கொண்ட மாமியார் பணத்தைகோரியவனை
மட்டக்களப்பு நீதிமன்றிற்கு முன்னால் குறித்த பெண் அழைத்துள்ளார், இதன் பிரகாரம் பணத்தைகோரிய குறித்த நபரும் கல்கமுவ பிரதேசத்தில் வான் ஒன்றை வாடகைக்கு சாரதியுடன் எடுத்துக் கொண்டு
அதிகாலை 4 மணிக்கு தன்னுடன் கல்கமுவ பிரதேசத்தில் திருமணம் முடித்துள்ள முறைப்பாடு செய்திருந்த பெண்ணின் 46 வயதுடைய சகோதரனை அழைத்துக்கோண்டு மட்டக்களப்பு நீதிமன்றிக்கு முன்னால் பகல் வந்தடைந்து காத்திருந்தனர் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.