SuperTopAds

வார இறுதியில் முழு ஊரடங்கு!! -டெல்லியில் அமுல்-

ஆசிரியர் - Editor II
வார இறுதியில் முழு ஊரடங்கு!! -டெல்லியில் அமுல்-

இந்தியாவின் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஒமைக்ரொன் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 8 முதல் 10 நாட்களில் 11,000 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக வாரஇறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமுல்படுத்துவதாக மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பேருந்து மற்றும் மெட்ரோ தொடருந்து நிலையங்களுக்கு வெளியே மக்கள் கூடுவதை தடுப்பதற்காக, மீண்டும் பேருந்துகளும், மெட்ரோ தொடருந்துகளும் முழுமையான ஆசனக் கொள்ளளவுடன் இயக்கப்படும்.

கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டெல்லி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.