ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது மரணம்!! -இந்தியாவில் இன்று பதிவானது-
இந்தியாவில் உலகையே அச்சுறுத்திவரும் ஒமிக்ரோன் திரிபு வைரஸ் தொற்றின் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
அந்நாட்டின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் இதுவரையில் 2,135 ஒமிக்ரோன் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.