குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்து, ரவுடிகளின் அட்டகாசத்தை நிறுத்து..! கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்துடன் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்து, ரவுடிகளின் அட்டகாசத்தை நிறுத்து..! கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்துடன் போராட்டம்..

இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தக்கோரியும் சடலத்துடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்திய நிலையில், பொலிஸாரின் வாக்குறுதியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருக்கின்றது. 

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஏ9 வீதியை மறித்து இடம்பெற்றது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கோரி பரந்தன் வர்த்தகர்கள் நேற்று (03-01-2022) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த சம்பவத்தில் குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்யப்பட்டதோடு மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் கைது செய்யப்படாத நிலையில் இன்றைய தினம் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் குறித்த இளைஞனின் இறுதி கிரியைகள் இடம்பெற்றதை தொடர்ந்து சடலம் மக்கள் பேரணியுடன் பரந்தன் சந்திவரை சென்றது. தொடர்ந்து குறித்த பகுதியில் ஏ9 வீதியை மறித்து 

இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பல்வேறுபட்ட வயதை சேர்ந்தவர்கள் இணைந்து வீதி மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது ஏ9 வீதிய ஊடான போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டது. இந்த நிலையில் பொலிசார்  போக்குவரத்தினை சீர் செய்யும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தபோதிலும், 

போராட்டக்காரர்கள் எதிர்ப்பினை தெரிவித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் குறித்த போக்குவரத்திற்காக மாற்று வழிகள் பொலிசாரினால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக பெருமளவான பொலிசார் வரவழைக்கப்பட்ட போதிலும் 

அவர்களை கட்டுப்படுத்த பொலிசாரால் முடியாது போனது. இந்நிலயைில் பொலிஸ் உயரதிகாரிகளும் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.தொடர்ந்து குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதிக்க கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருகை தந்து புாராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும், 

குடும்பத்தினரிடமும் கலந்துரையாடியிருந்தனர். குறித்த குறிற்வாளிகளை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் அவர்களிடம் தெரிவித்தார். 

இதேவேளை மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பரந்தன் சந்தியில் பொலிஸ் காவலரண் ஒன்றை அமைப்பதாகவும், ஏனையவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.இதேவேளை குறித்த விடயங்களை உள்ளடக்கி போராட்டதத்லி் ஈடுபட்டவர்களின் ஒப்பத்துடன் 

கடிதம் ஒன்றும் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை குறித்த விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்து பொலிஸ் அத்தியட்சகர் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கையளித்தார்.இதனை அடுத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் 

அவ்விடத்தை விட்டு கலைந்து சென்று உயிரிழந்தவரின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டனர். குறித்த போராட்டம் சுமார் 30 நிமிடங்கள் ஏ9 வீதியை மறித்து இடம்பெற்றிருந்த நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று வழிகள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு