SuperTopAds

காதலிக்க மறுத்ததால் சிறுமி!! -வாயில் விஷத்தை ஊற்றிய இளைஞர்-

ஆசிரியர் - Editor II
காதலிக்க மறுத்ததால் சிறுமி!! -வாயில் விஷத்தை ஊற்றிய இளைஞர்-

இந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தில் காதலிக்க வற்புறுத்தி சிறுமி வாயில் விஷத்தை ஊற்றிய இளைஞர்  தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குறித்த மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளைஞர் 11 ஆம் வகுப்க்கில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த இளைஞர் சிறுமியின் வீட்டிற்கு சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கோபமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்து இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து சிறுமியின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

பின் தானும் மீதம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, கத்தியால் இடது கையில் அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதில் இருவரும் மயங்கினார்கள். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் கடம்பூர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.