SuperTopAds

தனது சொந்த பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து அடித்ததுடன் உடலில் மிளகாய்துாள் துாவிய தந்தை!

ஆசிரியர் - Editor I
தனது சொந்த பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து அடித்ததுடன் உடலில் மிளகாய்துாள் துாவிய தந்தை!

தனது சொந்த பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து தாக்கியதுடன் பிள்ளைகளின் உடலில் மிளகாய்துாள் துாவி சித்திரவதை செய்த தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் ஹட்டன் - குடாகமபகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 7 வயதான மகள் மற்றும் 5 வயதான மகனையும் நிர்வாணமாக்கி மரத்தில் கட்டிவைத்து தாக்கியதுடன் மிளகாய்துாளும் கொட்டியுள்ளார். 

எவ்வாறாயினும், பிரதேச மக்களின் தலையீட்டுடன் குறித்த சிறுவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.