இரணைமடு வான் கதவுகளை அவசரமாக திறக்கும் நிலை தற்போதில்லை! மாகாண பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர்..
இரணைமடு குளத்தின் வான் கதவுகளை அவசரமாக திறக்கும் நிலை தற்போதில்லை. என வடமாகாண பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் தம்பிராஜா ராஜகோபு தொிவித்திருக்கின்றார்.
இது குறித்து மேலும் அவா தொிவித்துள்ளதாவது, தற்போது குளத்தின் நீர்மட்டம் 34 அடி 95 இஞ்சியாக காணப்படுகின்றது. எனினும் 36 அடிவரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். எனவே உடனடியாக திறக்கும் நிலை இல்லை.
அதேவேளை குளத்தின் நீரேந்து பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில் குளத்திற்கான நீர் வரத்து அதிகமாக உள்ளது. அப்படி நீர்வரத்து சடுதியாக அதிகரித்து குளத்தின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்தால் அவ்வாறான தேவை எழலாம்.
ஆனால் அவ்வாறான நிலை இல்லையென்றே கருதுகிறோம் என கூறியுள்ளார். இதேவேளை இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் வடிநில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேற்றய தினம் எச்சரித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.