போத்தலால் குத்தி இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞன் படுகாயம்! சம்பவ இடத்தில் நீதிபதி, பொலிஸார் விசாரணை..
போத்திலை உடைத்து குத்தி இளைஞன் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுவருட தினமான நேற்றய தினம் கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் 24 வயதான கார்த்திக் என்ற இளைஞன் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் மருமகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இச்சம்பவம் நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பரந்தன் சந்திக்கருகில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து காயமடைந்தவர் கூறுகையில், கார்திக்கை நான்கு பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசத்தினால் தாக்கிக்கொண்டிருந்தபோது தான் அதனை தடுக்க சென்றதாகவும் இதன்போது தன்னை அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டினர்.
அதனால் தான் காயமடைந்தாகவும், பின்னர் அவர்கள் கார்திக்கையும் வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்றைய (02) தினம் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவானும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.