இரணைமடு வடிநில பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பரிவு..
வடக்கில் கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையினால் இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் இரணைமடு வடிநில பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மற்றும் கனகராயன்குளம் பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ள நிலையில் குளததிற்கான நீர் வரத்து அதிகரித்திருக்கின்றது.
இதனை கருத்தில் கொண்டு இரணைமடு குளத்தின் வான் கதவுகள் சிறிய அளவில் இன்று திறக்கப்படும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.