கோஷ்டி முறுகலில் போத்தலை உடைத்து குத்தி இளைஞன் கொலை! புதுவருடத்தில் நடந்த பயங்கரம்..
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் கோஷ்டி ஒன்று போத்திலை உடைத்து குத்தியதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. கார்த்தி என அழைக்கப்படும் 28 வயதான இளைஞனே கொல்லப்பட்டுள்ளார்.
குழுக்களுக்கிடையில் உருவான மோதலில் போத்தலை உடைத்து குத்தியதில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகள் கூறுகின்றன.
உயிரிழந்தவருடைய சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம். தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்ட நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.