1,000ற்க்கும் அதிகமானவர்களுக்கு ஒமைக்ரொன்!! -இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்-
மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் ஒமைக்ரொன் திரிபுடன் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,270 ஆக உயர்வடைந்துள்ளது.
அந்நாட்டின் 23 மாநிலங்களில் குறித்த திரிபு பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மகாராஷ்டிராவில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமைக்ரொன் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, குஜராத்தில் 97 பேரும், ராஜஸ்தானில் 69 பேரும், தெலுங்கானாவில் 62 பேரும் ஒமைக்ரொன் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளனர்.