SuperTopAds

தாயை கற்பழிக்க வந்தவரை வெட்டிக் கொன்ற இரு சிறுமிகள்!! -கேரளாவில் பரபரப்பு-

ஆசிரியர் - Editor II
தாயை கற்பழிக்க வந்தவரை வெட்டிக் கொன்ற இரு சிறுமிகள்!! -கேரளாவில் பரபரப்பு-

இந்தியாவின் கேரளாவில் தமது தாயை கற்பழிக்க முயன்ற உறவினர் ஒருவரை இரு சிறுமியர் சேர்ந்து வெட்டிக் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயநாடு மாவட்டத்தில், 15 மற்றும் 16 வயது சிறுமியர் இருவர் தன் தாயுடன் வசித்து வந்தனர். இவர்களின் வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை காலை, 70 வயதான ஆண் உறவினர் ஒருவர் வந்துள்ளார்.

அத்துமீறி நுழைந்த அவர், சிறுமியரின் தாயை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்து உள்ளார். இதைக் கண்ட அந்த இரு சிறுமியரும், அவரை தடுக்க முயற்சித்தனர். 

எனினும், அவரை தடுக்க முடியாமல் போனது. பின், ஆத்திரமடைந்த சிறுமியர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் உடலை சாக்குப் பையில் வைத்து, வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். இதையடுத்து, தாயுடன் சேர்ந்து அந்த இரண்டு சிறுமியரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தனர். இந்த சம்பவம், வயநாடில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.