SuperTopAds

பல்லி விழுந்த உணவு உண்ட மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில்!!

ஆசிரியர் - Editor II
பல்லி விழுந்த உணவு உண்ட மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில்!!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையொன்றில் பல்லி விழுந்த உணவு வழங்கப்பட்டமையால், 80 மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பாடசாலையில் வழமை போல் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த மதிய உணவை உண்ட 80 மாணவர்கள்  சிறிது நேரத்தில் நோய்வாய்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த மாணவர்கள் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கபட்டுள்ளனர். மேற்படி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.