வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாக தொலைபேசியில் பேசி பெருமளவு பணத்தை சுருட்டிய பெண் கைது!

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாக தொலைபேசியில் பேசி பெருமளவு பணத்தை சுருட்டிய பெண் கைது!

வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள் அனுப்பபட்டுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு பணம் வைப்பிலிடுமாறு கூறி சுமார் 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, கிளிநொச்சி - திருமுறிகண்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கிளிநொச்சியை சேர்ந்த மற்றொரு பெண் தொடர்பு கொண்டு வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொருட்கள்

அனுப்பபட்டுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு பணத்தை வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளார். இதற்கமைய முறிகண்டியை சேர்ந்த பெண் சுமார் 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளார். 

இது தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது .அதன்பின் பொலிஸாரின் விசேட நடவடிக்கை மூலம் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில்,

எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு