நல்லாட்சி குறியீடு பட்டியலில் முதலிடத்தை பிடித்த தமிழகம்!

ஆசிரியர் - Admin
நல்லாட்சி குறியீடு பட்டியலில் முதலிடத்தை பிடித்த தமிழகம்!

குரூப் ‘ஏ’ மாநிலங்கள், குரூப் ‘பி’ மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நல்லாட்சிக் குறியீடு - 2021, மத்திய பத்திரிகை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நல்லாட்சி தினத்தையொட்டி, தில்லி அறிவியல் அரங்கில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகள் துறையால் தயாரிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சிக் குறியீட்டை நேற்று வெளியிட்டார்.

நீதி மற்றும் பொது பாதுகாப்பு பிரிவில் ‘ஏ’ குரூப் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

நல்லாட்சி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். பின்னர் அவர் பேசியதாவது:

கடந்த 7 ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு வழங்கும் நல்லாட்சிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். மோடி அரசு மேற்கொண்ட வளர்ச்சியின் பலனை மக்கள் அனுபவிக்கத் தொடங்கிய 2014ஆம் ஆண்டு முதல் ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக, கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட வரவில்லை. ஏனெனில் இது தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் என்று கூறப்பட்டது.