"மீனவர் பிரச்னை குறித்து மத்திய அரசு கவலைப்படுவதே இல்லை" - சீமான் ஆதங்கம்!

ஆசிரியர் - Admin

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 17வது சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வாழ்க்கை முழுவதும் நமக்குப் போராட்டமாக இருந்தால் நாம் எப்போது வாழ்வோம்? மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு கவலைப்படவில்லை. கொல்வது, சிறைத் தண்டனை அனுபவிப்பது, படகு பறிப்பது, வலையைப் பறிப்பது எல்லாம் தமிழர்களுக்கு நடக்கிறது. இதனால் மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசுக்கு தமிழர்களின் வரிகளும் வாக்குகளும் வளங்களும் தேவை. ஆனால், தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். டிசம்பர் 26, 2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தியா உட்பட 14 நாடுகளை அழித்தது. அன்று சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழக கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கியது. மொத்தம் 10,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சுனாமியின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கடலில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.