SuperTopAds

சுனாமி பேரலை இடரில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி

ஆசிரியர் - Editor III
சுனாமி பேரலை இடரில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் அஞ்சலி

சுனாமி பேரலை இடரில் உயிரிழந்தோருக்கு அம்பாறை மாவட்ட  உறவுகள் உணர்வு பூர்வமாக  அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை ,சாய்ந்தமருது ,பாண்டிருப்பு ,பெரியநீலாவணை, மாளிகைக்காடு ,காரைதீவு ,நிந்தவூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களினால்   கடைப்பிடிக்கப்பட்டது.

இதன் படி கல்முனை பௌத்த விகாரை, பாண்டிருப்பு  நினைவாலம் ,காரைதீவு சுனாமி நினைவாலயம் , கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

மேலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக இங்கு அமைக்கப்பட்ட  பல தூபிகளில்  மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று இடம்பெற்று  இன்றுடன்  17 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரிப் நிர்வாக சபை இணைந்து ஏற்பாடு செய்த  கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டுஇவிஷேட துஆ பிராத்தனையும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

நாட்டில் கடந்த 2004  ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பகுதி அதிகமான உயிரிழப்புக்களையும் இ சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.