SuperTopAds

டியூசன் சென்ற மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!! -இருவர் கைது: இருவர் தலைமறைவு-

ஆசிரியர் - Editor II
டியூசன் சென்ற மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!! -இருவர் கைது: இருவர் தலைமறைவு-

தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற பாடசாலை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டம் சட்பூர் கிராமத்தை சேர்ந்த 10 வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை அயல் கிராமத்தில் நிலையத்திற்கு பயிற்சிக்காக நடந்து சென்றுள்ளார்.

இதன் போது குறித்த மாணவியை பின் தொடர்ந்த வந்த இரண்டு பேர் அவரை கிராமத்திற்கு அருகே உள்ள காட்டிற்குள் இழுத்து சென்றுள்ளனர். அங்கு மேலும் இரண்டு பேருடன் சேர்ந்துகொண்டு அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

தனியார் கல்விநிலையத்திற்குச் சென்ற தனது மகள் வேகநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அச்சமடைந்த மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து பொலிஸாருடன் இணைந்து பெற்றோரும் மாணவியை தேடினர்.

அப்போது, கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை பொலிஸார் மீட்டனர். இதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். அந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.