பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு!! -அதிர்ச்சி தகவல் வெளியிட்ட விஞ்ஞானிகள்-

ஆசிரியர் - Editor II
பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு!! -அதிர்ச்சி தகவல் வெளியிட்ட விஞ்ஞானிகள்-

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பூமி தற்போது வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர். 

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு எடுக்கும் 365 நாட்கள் ஒரு வருடமாக கருதப்படுகின்றது. மேலும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. 

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி வேகமாக சுழன்றுள்ளது. அதாவது முன்பு ஒரு வருடம் என்பது 420 நாட்களை கொண்டதாக இருந்துள்ளது. தற்போது அதன் சுழலும் வேகம் குறைந்துள்ளதால், 365 நாட்களை கொண்ட ஒரு வருடமாக உள்ளது. 

எனினும் நாட்களை துல்லியமாக கணக்கிடுவதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒரு நாளை சேர்த்து லீப் ஆண்டு என கணக்கிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பூமி தற்போது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதாவது சுழலும் வேகத்தில் ஒரு வினாடி மாறுபாடு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சாதாரன மற்றும் டிஜிட்டல் கடிகாரங்களில் ஒரு வினாடி மாறுபாட்டினை கண்டறிவது என்பது இயலாத காரியம். விஞ்ஞானிகள் இதனை அணிக்கடிகாரத்தின் வாயிலாக கண்டுபிடித்துள்ளனர்.

அணு கடிகாரம் மிகவும் துல்லியமானது மற்றும் முழுமையான பூஜ்ஜியத்திற்கு குளிரூட்டப்பட்ட அணுக்களில் எலக்ட்ரான்களின் இயக்கத்தை அளவிடுகிறது. எனவே விஞ்ஞானிகளால், 1972 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை லீப் விநாடிகள் சேர்க்கப்பட்டு, பூமியின் சுழற்சியில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அணுக் கடிகாரத்தை வைத்திருக்கின்றனர். 

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பதனால், விஞ்ஞானிகள் அணு கடிகாரத்தை ஒரு வினாடி குறைக்கிறார்கள். இங்கிலாந்தின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி பீட்டர் வைபர்லி கூறுகையில், சுழற்சி வேகம் மேலும் அதிகரித்தால், நாம் ஒரு வினாடியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். பூமியின் மையப்பகுதி, பெருங்கடல்கள், வளிமண்டலத்தின் இயக்கம் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை ஆகிய பல்வேறு காரணங்களால் பூமியின் சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு