மகாவலி அதிகாரசபை வடக்கிற்கு தண்ணீர் கொண்டு வரவேண்டுமே தவிர சிங்கள மக்களை கொண்டு வரகூடாது..
தமிழ் மக்களின் வாழ்விடங்களில் பெளத்த விகாரைகள் கட்டப்படுவதை தமிழ்தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கும், 2011ம் ஆண்டே இதனை நாம் எதிர்த்துள்ளோம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள் ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்.அலுவலகத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இதன்போது பௌத்தர்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுது தொடர்பாகவும், மகாவலி அதிகாரசபையினால் திட் டமிட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படுவது தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன் போது மேலும் அவர் கூறுகையில், வடகிழக்கு மாகாணங்களின் நிலமைகள் தொடர்பாக 2011ம் ஆண்டு 2 அறிக்கைகளை நாங்கள் சமர்பித்துள்ளோம். அதில் இந்த பௌத்த விகாரை அமைப்பு விடயமும் உள் ளடக்கப்பட்டிருக்கின்றது. அதன் பயனாக பல விகாரைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனாலும் புதிதாக அமைக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.
இந்நிலையில் பௌத்தர்கள் வாழாத பகுதியில் பௌத்த விகாரைக ளை அமைப்பதை நிறுத்தவில்லை. எனவே அது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம். மேலும் மகாவலி அதிகாரசபை வடக்கு மக்களுக்கு தண்ணீர் தரட்டும். சிங்கள மக்களை தரவேண்டாம். என நான் நாடா ளுமன்றில் கூறியிருக்கின்றேன். அண்;மையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு சென்றிருக்கின்றனர்.
மேலும் இன்று மாகாணசபை உறுப்பினர்க ளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து பேசுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. அது பின்னர் தவி ர்க்க முடியாத காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடயங்களை மிக முக்கிய த்துவம் வாய்ந்தவையாக கருதி தமிழ்தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்கும்.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலமைகளைபோல் வடக்கில் ஏற்பட இடமளிக்கப்படாது என்றார்.