துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியை! மரணத்தில் சந்தேகம், பொலிஸார் தீவிர விசாரணை..
சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருக்கின்றனர்.
கிளிநொச்சி - ஜெயந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான இவர் முன்பள்ளி ஆசிரியையாக சேவை புரிந்து வந்துள்ளார்.
விநாயகபுரம் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாாறு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர்.
நேற்று இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது.இந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
சடலத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.