SuperTopAds

நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லாத நாடு..! பொதுமக்களின் நிலை என்ன? சட்டத்தரணி சுகாஸ் கேள்வி..

ஆசிரியர் - Editor I
நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லாத நாடு..! பொதுமக்களின் நிலை என்ன? சட்டத்தரணி சுகாஸ் கேள்வி..

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி த.கருணாகரன் வீட்டுக்குள் நுழைந்து நீதிபதி மீதே தாக்குதல் நடத்தி, அவர் மனைவியின் தாலி கொடி அறுக்கப்பட்ட சம்பவம் இந்நாட்டில் தனிநபர் பாதுகாப்பு இல்லை. என்பதை தெளிவாக காட்டுகின்றது. 

மேற்கண்டவாறு கூறியிருக்கும் தமிழர் உரிமைகள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர், சட்டத்தரண சுகாஸ், இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாக கூறியிருக்கின்றார். 

மேலும் நாட்டிலுள்ள சகல சட்டத்தரணிகள் சங்கங்களும் உடனடியாக கூடி காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு உரிமையுடன் கோருகின்றோம் எனவும், 

நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகளின் பாதுகாப்பே கேள்விக் குறியாகும்போது சாதாரண மக்களின் பாதுகாப்புப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு வெகுநேரம் ஆகாது என்பதனை தமிழர் உரிமைகள் கண்காணிப்பகம்

இத்தருணத்தில் சுட்டிக்காட்டுகின்றது என்றார்.