SuperTopAds

நீதிபதி வீட்டிற்குள்ளேயே புகுந்து நீதிபதியை தாக்கி காயப்படுத்தி நீதிபதியின் மனைவியுடைய தாலி கொடியை அறுத்த பயங்கரம்!

ஆசிரியர் - Editor I
நீதிபதி வீட்டிற்குள்ளேயே புகுந்து நீதிபதியை தாக்கி காயப்படுத்தி நீதிபதியின் மனைவியுடைய தாலி கொடியை அறுத்த பயங்கரம்!

நீதிபதியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் நீதிபதியை தாக்கிவிட்டு அவரின் மனைவியிடமிருந்து 11 பவுண் தாலி கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் நேற்று அதிகாலை அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிவரும் அக்கரைப்பற்று வை.எம்.சி. வீதியில் உள்ள அவரின் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோது சம்பவதினமான நேற்று அதிகாலை 3 மணியளவில் 

வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் இரு கொள்ளையர்கள் மனைவியின் தாலிக்கொடியை அறுத்தபோது சத்தம் கேட்டு உடன் எழுந்த நீதவான் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது 

அவரை தாக்கியதில் நீதவான் காயமடைந்ததையடுத்து கொள்ளையர்கள் தாலிக்கொடியுடன் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த பகுதியில் கடந்த சவாரம் இருவீட்டில் உறக்கத்தில் இருந்த இரு பெண்களின் தாலிக்கொடிகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதுவரை கொள்ளையர்களை கைது செய்யப்படவில்லை. 

என்பது குறிப்பிடத்தக்கது.