பெண்ணை சுட்டுக்கொன்ற நபர் தோட்டத்தில் மறைந்திருந்த நிலையில் கைது, நஞ்சருந்தி தற்கொலைக்கும் முயற்சி..
நெடுங்கேணி - சேனைப்புலவு பகுதியில் இளம்பெண்ணை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் பொலிஸார் கைது செய்தபோது நஞ்சருந்த தற்கொலைக்கு முயற்றருக்கின்றார்.
கடந்த 15 ஆம் திகதி காலை 11.30 மணியளவில் நெடுங்கேணி - சேனைப்பிலவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த நபர்ஒருவர் அவர் மீது நாட்டுத்துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். இந்நிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில்
இரண்டு நாட்களின் பின்னர் நேற்றய தினம் தோட்டக்காணி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் நெடுங்கேணி பொலிசாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவரை கைதுசெய்ய முயற்சித்தபோது அவர் நஞ்சருந்தியுள்ளார்.
எனினும் பொலிசாரால் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதேவேளை குறித்த நபருக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவரும் பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.