SuperTopAds

அந்த சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை!! -வெளிப்படையாக பேசிய நித்யா மேனன்-

ஆசிரியர் - Editor II
அந்த சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை!! -வெளிப்படையாக பேசிய நித்யா மேனன்-

பிரபல நடிகையாக இருக்கும் நித்யா மேனன், அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் தன்னை காயப்படுத்திய சம்பவம் குறித்து மனம் திறந்து கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் தமிழில் 2 படங்களிலும் தெலுங்கு மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் வழங்கிய நேர்காணலில் 10 வருடங்களுக்கு முன் நான் தெலுங்கு படத்தில் அறிமுகமானபோது பிரபாஸ் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பினர். 

அப்போது பிரபாஸ் யார் என்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்ததை சர்ச்சையாக்கினர். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது. அந்த நேரத்தில் அவர் பாகுபலி நடிகரும் இல்லை. அதனால் அவர் எனக்கு தெரியாது என உண்மையை சொன்னேன். 

இதனால் ரசிகர்கள் என்னை பயங்கரமாக விமர்சித்தனர். இந்த சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆனபோதிலும் என்னால் மறக்க முடியவில்லை. சினிமா துறையில் அப்போதுதான் அடியெடுத்து வைத்த எனக்கு இது பெரிய அடி. இந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது என்றார்.