சகோதரர்களான சிறுவர்களை காணவில்லை..! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
சகோதரர்களான சிறுவர்களை காணவில்லை..! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்..

கொட்டதெனியாவ - வத்தேமுல்ல பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக முறை்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் காணாமல் போன இருவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் புகைப்படங்களை மேலே காண முடியும் என்பதுடன் அவர்கள் தொடர்பில் தகவல்கள் அறிந்தால் 

கீழ்வரும் இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது. கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 859 1634

கொட்டதெனியாவ பொலிஸ் நிலையம் - 033 224 0050 / 033 227 2222

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு