கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த புகைரதம் மீது மோதிய ஆட்டோ! மயிரிழையில் தப்பிய சாரதி..!
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் புகைரத பாதைக்குள் நுழைந்த ஆட்டோ மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.
சம்பவத்தில் ஆட்டோ சாரதி மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றது. குறித்தசம்பவம் இன்று காலை 10 மணியளவில் தாண்டிக்குளம் தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை பகுதியில் இருந்து தாண்டிக்குளம் புகையிரதக்கடவையால் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று தண்டவாளப்பகுதியில் சென்றபோது இயந்திரக்கோளாற்றினால் நின்றுள்ளது.
இதன்போது கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற புகையிரதம் குறித்த முச்சக்கரவண்டியினை மோதித்தள்ளியது.
இந்நிலையில் முச்சக்கரவண்டியின் சாரதி விரைந்து செயற்ப்பட்டு கீழே பாய்ந்தமையால் அதிஸ்டவசமாக உயிர்பிழைத்தார்.
முச்சக்கரவண்டியை பந்தாடிய தொடருந்து அதனை சிறிது தூரத்திற்கு இழுத்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.