டிப்பரில் இளம்பெண் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..!
கிளிநொச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் ஒருவரை கடத்திச் சென்ற விவகாரத்தில் சாரதி உட்பட 7 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
கடந்த 7ம் திகதி கிளிநொச்சியில் பெண் ஒருவரை பலவந்தமாக டிப்பரில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இதன்போது டிப்பர் விபத்துக்குள்ளாதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பேசப்பட்ட நிலையில்,
இந்த விவகாரத்தில் சாரதி மற்றும் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் நேற்று முன்தினம் முற்படுத்தப்பட்டனர். சாரதியை எதிர்வரும் 21ம் திகதிவரையும்,
ஏனையவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.