உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை! சட்டத்தரணி க.சுகாஸ் தொிவிப்பு..

ஆசிரியர் - Editor I
உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுதலை! சட்டத்தரணி க.சுகாஸ் தொிவிப்பு..

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்ட 10 பேரும் இன்றுபுதன்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதாக சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மே மாதம் 18ஆம் திகதி உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த 10 பேரை பொலிஸார் கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதை எந்தச் சட்டத்தினாலும் தடுக்க முடியாது என கௌரவ மன்றுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தினோம். ஏழு மாத காலமாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தினோம் எமது பக்க நியாயங்களை கேட்டறிந்த மன்று 

அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியது. நமது சட்ட போராட்டத்திற்கு எம்மோடு கைகோர்த்த சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல், ஜெசிங்கம், மற்றும் நமது முஸ்லிம் சகோதர இனத்தைச் சேர்ந்த ரம்சி மற்றும் றிப்கான் ஆகியோருக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே பாதிக்கப்பட்ட தமிழன் எங்கிருந்தாலும் அவர்களுக்காக நீதி கிடைக்கத் தொடர்ந்தும் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு